தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பில் நாட்டின் குடிமகன் என்ற ரீதியில் கவலையடைவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்று (29) தேர்தல்கள் ஆணையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியில் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது வாக்காளர்களின் எண்ணிக்கை 230,650 வாக்காளர்களினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின்போது தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பில் அவர்களும் அதிருப்பி தெரிவித்ததாக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

