வடிவேல் சுரேஷ் ரணிலுக்கு ஆதரவு

318 0

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

தான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது என இன்று அலறி மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தான் இணைந்ததாக கருத்து வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேற்று முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment