புதிய அரசாங்கத்தின் விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராமவில் இன்று (29) நடைபெறும் பெரும்போகத்திற்கான பயிர் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம, சந்தகிரிகொட பயிர் நிலப்பரப்பில் இந்நிகழ்வு தற்போது இடம்பெறுகின்றது.
பௌத்த விகாரை ஒன்றில் உயிரியியல் பன்முகை தன்மை கொண்ட பழச் செய்கையை ஆரம்பிக்கும் முகமாக இந் நிகழ்வும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

