மீண்டுமொரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் நாமல் குமார..!

17116 48

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சதிமுயற்சி பின்னணியில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சரத்பொன்சேகா ஆகியோரே உள்ளனர் என மீண்டுமொரு அதிர்ச்சி தகவலை  ஊழலுக்கு எதிரான படை அணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார வெளியிட்டுள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ரணில் விக்கிரமசிங்க மற்றும் சரத்பொன்சேகா ஆகியோரே இந்த கொலை சதி தொடர்பில் திட்டமிட்டனர்.

இந்த சதித் திட்டத்துக்கு பாதாள உலகத் தலைவன் மாகந்துர மதுஸ் என்பரை பயன்படுத்த தீர்மானித்ததோடு நாலக சில்வா திட்டத்தை முன்னெடுக்க பணிக்கப்பட்டார்.

எனவே கைது செய்யப்பட்டுள்ள நாலக சில்வா தனது சுய தேவைக்காக செயற்படவில்லை. எனேவே அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கினாலும் பரவாயில்லை என்றார்.

Leave a comment