துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் கைது

340 0

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொஸ்கொட பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (25) இரவு மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனையின் போது கட்டில் மெத்தைக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட போர 12 என்ற துப்பாக்கி ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment