தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தால் புகை மூட்டம் அடைந்த பொகவந்தலாவ நகரம்

333 0

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கோறி இன்று (26) காலை 08 மணியில் இருந்து காலை 11 மணிவரை ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்தும் டயர்களை ஏறித்தும் பொகவந்தலாவ நகரில் தொழிலாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்பாட்டத்தில் பொகவந்தலாவ, கொட்டியாகலை ,பொகவான, குயினா, ஜெப்பல்டன், பி.எஸ், டி.பி.செல்வகந்தை ஆகிய தோட்டபகுதிகளை சேர்ந்த 2000ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

எங்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வழியுருத்தி கறுப்பு கொடிகளை ஏந்தியும், அவ்வாறு வழங்க முடியாவிட்டால் தொழில் அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோஷங்களை எழுப்பியும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொகவந்தலாவ வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வர்த்தகர்களும் வாகனசாரதிகளும் கலந்து கொண்டனர்.

தோட்ட தொழிலாளர்களுக்கு 25 கட்டாய வேலை நாட்கள் மற்றும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தினால் சுமார் மூன்று மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment