போலி நாணயத் தாள்களுடன் வௌிநாட்டு பிரஜை கைது

311 0

போலி நாணயத் தாள்களை வைத்திருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் பிலியந்தலை, மடபாத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வலான ஊழல் எதிர்ப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் நான்கும் ஆபாச படங்களுடனான கைத்தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

28 வயதுடைய மாலி நாட்டுப் பிரஜை ஒருவரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment