மாலியிலிருந்து கட்டளைத் தளபதியை மீளழைக்க இராணுவம் தீர்மானம்

221 0

ஐ.நா. விடுத்த கோரிக்கையை ஏற்று மாலி அரசாங்கத்தில் சேவையாற்றும் இலங்கை இராணுவத்தின் லுதினன் கேர்ணல் களன அமுனுபுரவை மீள இலங்கைக்கு அழைத்து வர இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.

மாலி நாட்டில் கடமையில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் சமாதானப் படைப் பிரிவின் கட்டளையிடும் தளபதியை நாட்டுக்கு வரவழைக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

மனித உரிமை தொடர்பில் இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. விளக்கமளித்துள்ளது.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் ஏற்கனவே மறுத்திருந்தது. எமது நாட்டு இராணுவத்தினர் எந்தவிதமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிலும் தொடர்பற்றவர்கள் எனவும் இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து ஐ.நா.வின் செய்தி வெளியானவுடன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment