முற்பணம் வழங்கவில்லை என்றால் பூரண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்-தொண்டமான்

393 0

தீபாவளிக்கு முற்கொடுப்பனவான 10,000/= ரூபாவினை வழங்க வேண்டும் என முதலாளிமார் சம்மேளனத்திடம் அறிவித்துள்ளதாகவும் அவ்வாறு வழங்கவில்லை என்றால் பூரண ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட வேண்டி ஏற்படும் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று அல்லது நாளை பாராளுமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகளையும் சந்தித்து அவர்களது ஆதரவினையும் பெறப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாளை பிரதமருடைய பதில் தெரிந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்று தீர்மானிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment