தகவல் அறியும் உரிமை சட்டம் அவசியமாகும் – அரவிந்தகுமார்

186 0

தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாட்டு மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். இதனை முறையாக பயன்படுத்தினால் நாட்டில் இலஞ்சம், ஊழல் மோசடி போன்ற குற்றச் செயல்கள் எதுவும் இடம்பெற வாய்ப்பில்லை என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.

மேலும் ஜனநாயக நாடொன்றில் தகவல் அறியும் உரிமையென்பது பிரதான விடயமாகும். அரசில் என்ன இடம்பெறுகின்றதென்பதையும் அதன் வேலைத்திட்டங்கள் குறித்தும் நாட்டு மக்கள் அறிந்து கொள்வது அதி முக்கியமாகும். இதுவும் நல்லாட்சிக்கும் ஜனநாயக ஆட்சிக்கும் உரிய பிரதான வகிபாகமாகும் என்றும் தெரிவித்தார்.

யு.எஸ்.எ.ய்.ட் அமைப்பு மற்றும் இலங்கை பத்திரிகைப் பேரவையினர் ஆகியோரின் அனுசரணையுடனும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் தகவல் அறியும் உரிமை சட்டமூலம் தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

Leave a comment