ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா செல்கிறார்

12 0

 ரணில் விக்கிரமசிங்க இன்று (18) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை இந்தியாவுக்கு புறப்பட இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உயர் மட்ட சந்திப்பையும் நடத்தவுள்ளார்.

இந்த சந்திப்பு புதுடில்லியில் இந்த மாதம் 20 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்திய விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சிரேஷ்ட அரசியல்வாதிகளுடனும் சந்திப்பு நடத்த உள்ளார்.

இந்திய விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், அமைச்சர்களான சாகல ரத்னாயக்க, மலிக் சமரவிக்ரம, அர்ஜுன ரணதுங்க மற்றும் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

Related Post

காணாமல் போனோர் அலுவலகத்தில் ஜே வி பி முறையிடவுள்ளது

Posted by - August 13, 2016 0
ஜேவிபியின் ஸ்தாபகர் ரோகன விஜயவீர அதன் முன்னாள் செயலாளர் உபதிஸ்ஸ கமநாயக்க உட்பட்ட ஜேவிபியின் உறுப்பினர்கள் தொடர்பில் காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தில் முறைப்பாடு செய்ய ஜேவிபி…

இராஜாங்க அமைச்சர் சுஜீவவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு

Posted by - April 28, 2018 0
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் இன்னும் பல முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, மனித உரிமைகள் உதவிச் செயலாளராக இராஜாங்க…

போலி நாணய தாள்கள் – மூன்று பேர் கைது

Posted by - May 1, 2017 0
போலி நாணய தாள்களை தம்வசம் வைத்திருந்த மூன்று பேர், இரண்டு பகுதிகளில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மீரிகம – கிதலவலான பிரதேசத்தில் இருவர் கைது செய்யப்பட்டனது.…

அனைத்து சந்தர்ப்பத்திலும் ஐ.தே.கட்சியே ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியது!

Posted by - January 6, 2019 0
வடக்கில் செயற்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளின் தலைவரனான பிரபாகரன் முதற்கொண்டு, மஹிந்தராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக செயற்பட்ட போது…

Leave a comment

Your email address will not be published.