மஹிந்த ராஜபக்ஷவிடம் குட்டு வாங்கினாலும் எனது கருத்து மாறாது- குமார வெல்கம

21 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசியல் பயணத்தில் குட்டுக்கள் வாங்குவதில் சிக்கல் இல்லையெனவும், அவர் குட்டுவதற்கு தகுதியானவர் எனவும் கூட்டு எதிரணியிலுள்ள சிரேஷ்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட கூட்டத்தில், குமார வெல்கமவுக்கு பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் சிலரினால் விமர்ஷனங்கள் முன்வைக்கப்பட்டமை குறித்து வினவிய போதே குமார வெல்கம எம்.பி. இதனைக் கூறினார்.

என்னுடைய கருத்தை நான் கூறிக் கொண்டே தான் இருப்பேன். எனது தலைவர் குட்டினால் அதனைத் தடவிக் கொள்வேன். அதற்காக கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர கூட்டு எதிரணியில் வேறு தலைவர் ஒருவர் இல்லையென்பதே என்னுடைய கருத்தாகும்.

தனக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு மஹிந்த ராஜபக்ஷ போன்று பிரபலம் கிடையாது. அவ்வாறு நான் பிரபலம் அடையும் போது எனது வயது அதற்கு இடம்கொடுக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியாக வருபவருக்கு சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இருப்பது கட்டாயமானது. அது மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமே இருக்கின்றது எனவும் குமார வெல்கம தனியார் வானொலியில்  நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறினார்.

Related Post

வன்னி இறுதி யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு பிரித்தானியா தடை

Posted by - December 24, 2017 0
ukவன்னி இறுதி யுத்தத்தில் கலந்துகொண்ட முன்னாள் இராணுவ பிரதானிகள் 10 பேருக்கும் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கும் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க தடை…

துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை யாருக்கும் வழங்கப் போவதில்லை

Posted by - August 2, 2017 0
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை (eastern terminal) எந்தவொரு தரப்பிற்கும் வழங்கப் போவதில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வாரமொன்றுக்கு 8,000 டெங்கு நோயாளர்கள்

Posted by - July 27, 2017 0
தற்பொழுது ஒரு வாரத்துக்கு 8,000 டெங்கு நோயாளர்கள் வரை பதிவு செய்யப்ப்டுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நிமல்கா பண்ணில தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வருடத்தில்…

துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி

Posted by - September 23, 2018 0
தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாடிகல பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பிக்கிப் பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்த வர்த்தகர் 42 வயதையுடையவர் எனத்…

‘பொன்னொளி நகர்’ வீட்டுத் திட்டம் கையளிப்பு-சஜித்

Posted by - March 7, 2019 0
யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு – மூளாயில் நிர்ணமாணிக்கப்பட்ட ‘பொன்னொளி நகர்’ வீட்டுத் திட்டம் நாளை பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர்…

Leave a comment

Your email address will not be published.