நாலக டி சில்வா CID யில் ஆஜர்

25 0

பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நால டி சில்வா இன்று (18) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

இன்று காலை 9 மணியளவில் அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் ஆஜராகியதை தொடர்ந்து தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நேற்று முன்தினம் அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அங்கு ஆஜராகியிருக்கவில்லை.

அதன்படி கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் அவருக்கு இரண்டாவது முறையாகவும் குற்றப்புலானய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மீதான விசாரணைகள் பக்கச் சார்பின்றி இடம்பெறும் என சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published.