தண்ணீரில் சூரியசக்தி மின் நிலையம் பணிகளை துவக்க வாரியம் தாமதம்

330 0

முக்கிய அணைகளுக்கு அருகில், தண்ணீரில் மிதக்கும், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மின் வாரிய இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளிக்கவில்லை என, தெரிய வந்துள்ளது.

ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர் நிலைகளின் மேல், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் படி, மாநில அரசுகளிடம், மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இதையடுத்து, ‘சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ என்ற பொதுத்துறை நிறுவனத்துடன் இணைந்து, மின் வாரியம், தண்ணீரில் மிதக்கும், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க முடிவு செய்தது.

இதன்படி, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை மற்றும் சேலம், மேட்டூர் அணைக்கு அருகில் உள்ள, நீர் நிலைகளின் மேல், தலா,

100 மெகா வாட்; தேனி, வைகை அணைக்கு அருகில், 50 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.தடுக்கப்படும்

இதனால், தண்ணீர் ஆவியாவது மற்றும் மணல் கொள்ளை தடுக்கப்படும்.மின் நிலையம், துணைமின் நிலையம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தும்போது, அதற்கு, மின் வாரிய இயக்குனர்கள் குழுவில், ஒப்புதல் பெற வேண்டும்.

இந்த குழுவில்,மின்வாரிய தலைவர், இயக்குனர் கள், எரிசக்தி துறை, நிதித்துறை, தொழில் துறை செயலர்கள் உள்ளனர்.சமீபத்தில் நடந்த, வாரியக் குழு கூட்டத்தில், தண்ணீரில் மிதக்கும் சூரியசக்தி மின் திட்டத்திற்கு, குழு ஒப்புதல் வழங்கவில்லை என, தெரிகிறது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறிய தாவது:தண்ணீரில் மிதக்கும் சூரியசக்தி மின் திட்டத்திற்கு, சோலார் எனர்ஜி நிறுவனம் தான், அதிகம் செலவிட உள்ளது. அத்திட்டத்திற்கு, திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை  மேற்கொள்ள, இயக்குனர்கள் குழுவில், கொள்கை ரீதியான ஒப்புதல் கோரப்பட்டது.

குழுவில் இருந்த சில அதிகாரிகள், ‘இந்தியா வில், இதுபோன்ற திட்டம் எங்கு செயல்படுத்த பட்டுள்ளது; இது தொடர்பான விபரங் களை தெரிவியுங்கள்’ எனக்கேட்டு, திட்டத்திற்கு, ஒப்புதல் வழங்குவதை நிறுத்தி வைத்தனர். இந்த விபரங்களை தெரிவித்து, யாருக்கும் பாதிப்பில்லாமல், மின்சாரம் கிடைக்கும் அத் திட்டத்தை, விரைந்து செயல்படுத்த, நட வடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார்.

Leave a comment