கோட்டாபய ராஜபக்ஷவின் மனு நவம்பர் 02ம் திகதி

209 0

பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ய தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் 02ம் திகதி மீண்டும் அழைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கும் தேவையில்லை என்று கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

குறித்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதா இல்லையா என்று தெரிவிப்பதற்காக கால அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன்படி குறித்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதா இல்லையா என்று நவம்பர் 02ம் திகதி நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment