களுத்தறை, நேபட உடோவிட பிரதேசத்தில் மூன்று வீடுகள் மீது இன்று (07) அதிகாலை 4.00 மணிக்கு ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ஒரு வீட்டுக்குள் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை பிரதேசவாசிகள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் தற்பொழுத ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் இரு வீடுகளுக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெறும் வேளையில் ஒரு வீட்டில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது பிள்ளை உட்பட ஐந்து பேர் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு இச்சம்பவத்தில் சிறு காயம் கூட ஏற்பட வில்லையெனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

