மத்திய மாகாண உத்தியோகபூர்வ ஆயுட்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவு

653 0

மத்திய மாகாணத்தின் உத்தியோகபூர்வ ஆயுட்காலம் நாளை (08) நள்ளிரவுடனும், வட மேல் மாகாணத்தின் உத்தியோகபூர்வ ஆயுட்காலம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடனும் நிறைவடையவுள்ளது.

அத்துடன், வட மாகாணத்தின் உத்தியோகபூர்வ ஆயுட்காலம் எதிர்வரும் 24 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ ஆயுட்காலம் நிறைவடைந்ததன் பின்னர் அதன் அதிகாரம் மாகாண செயலாளருக்கும், ஆணையாளருக்கும் வழங்கப்படுகின்றது.

இந்த மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ ஆயுட்காலம் நிறைவடைந்ததன் பின்னர் 06 மாகாண சபைகளுக்கான தேர்தல் நடாத்தப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment