எதிர்காலத்தில் உலக சந்தையில் எரிபொருள் பிரச்சினை சாதகமான நிலமைக்கு திரும்பிய பிறகு மீண்டும் எரிபொருள் விலை குறையும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் மக்களுக்கு அதன் பயன் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்த ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

