பொலிஸ்மா அதிபருக்கு பதவி விலக கூறவில்லை – அரசு

371 0

பொலிஸ்மா அதிபருக்கு பதவி விலக கூறவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாடு இன்று (03) தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டார்.

எனினும், நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பொலிஸார் தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பொலிஸ்மா அதிபரை கட்டாயப்படுத்தி பதவி விலக வைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave a comment