முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு பகுதியில் உளவு இயந்திரத்தில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் கயமடைந்துள்ளார்
இன்று மதியம் 2 மணியளவில் பிலவுக்குடியிருப்பு பகுதியில் காணியினை உளவு இயந்திரத்தில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது காணியில் இருந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததில் கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இவ்வாறு காயமடைந்த நபர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த 37 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான அரியராசா ஜெகன் என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

