அரசியலமைப்பு பேரவைக்கு விரைவில் அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு பேரவையின் உத்தியோகபூர்வ காலம் கடந்த செப்டம்பர் மாதம் 21ம் திகதியுடன் நிறைவடைவதாக பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இத்தவல அண்மையில் தெரிவித்திருந்தார்.
அரசியலமைப்பு பேரவையானது இலங்கையின் அரசியலமைப்பு பற்றிய மக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்று அவற்றை கலந்தாராய்ந்து அரசியலமைப்பு சட்டமூலத்தின் வரைவைத் தயாரிக்கும் நோக்கத்துக்காக அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

