பெரிய வெங்காயத்திற்கு கட்டுப்பாட்டு விலை

276 0

நன்றாக உலர்ந்த பெரிய வெங்காயம் ஒரு கிலோவினை 80 ரூபா கட்டுப்பாடு விலையின் கீழ் கொள்வனவு செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சதொச நிறுவனத் தலைவருக்கு அறிவுறுத்தயுள்ளார்.

இதற்கு முன்னர் வாழ்க்கைச் செலவு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானித்திற்கு அமைவாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் அறுவடை காலங்களின் போது வெளிநாடுகளிலிருந்து பயிர்களை இறக்குமதி செய்வதை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயிர்வகைகள் இறக்குமதி செய்யப்படுமானால் அதற்காக விவசாய அமைச்சிடம் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment