நேற்று (27) அதிகாலை பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவிலுள்ள ஆலயங்கள் இரண்டு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டத்திலுள்ள உள்ள முருகன் ஆலயம் ஒன்றும் அம்மன் ஆலயமொன்றுமே இவ்வாறு உடைக்கப்பட்டு, அவ்வாலயங்களிலிருந்த தங்க நகைகள், உண்டியல்களிலிருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணகளை ஆரம்பித்துள்ள நிலையில், இதுவரையிலும் சந்தேகநபர் எவரும் கைது கைதுசெய்யப்படவில்லை.
இதேவேளை குறித்த அம்மன் ஆலயமானது இதற்கு முன்னர் 3 தடவைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

