மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்தால் அதன் அரசியல் நன்மை பிரதமருக்கே கிடைக்கும் என அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 பேர் அடங்கிய குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (27) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 பேர் அடங்கிய குழுவினை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரை மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபரை பாதுகாப்பதற்காக பிரதமர் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரை கட்டுப்படுத்தி வைத்திருப்பது அமைச்சர் ரஞ்சித் மத்தும் பண்டார இல்லை எனவும் பிரதமர் மற்றும் சாகல ரத்னாயக்க ஆகியோரே பொலிஸாரை கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

