மஹிந்த குழு வன்முறையில் ஈடுபட்டால், விளைவு மோசமாகும்- மத்தும பண்டார

299 0

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் எனும் போர்வையில் எதிர்வரும் 5 ஆம் திகதி கூட்டு எதிர்க் கட்சியினரால் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கையின் போது பொது மக்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் நாட்டின் எந்தவொரு இடத்திலும் யாருக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் என்பவற்றை நடாத்த ஜனநாயக ரீதியில் உரிமை உள்ளது. இருப்பினும், ஜனநாயகம் எனும் போர்வையில் வன்முறையான வித்தில் செயற்படுவதற்கோ, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கோ முற்படுவார்களாக இருந்தால் பொலிஸார் சட்டத்தை சரியாக பின்பற்ற வேண்டியிருக்கும்.

எது எப்படிப் போனாலும், பொலிஸார் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment