பாராளுமன்ற சபைக்கென 232 கதிரைகளை புதிதாக கொள்வனவு செய்வதற்கு பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் சபையின் உட்பகுதிக்கு தரை விரிப்பொன்றும் கொள்வனவு செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது சபைக்குள் இருக்கும் கதிரைகள் பாராளுமன்றம் அமைக்கப்பட்ட காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருபவை எனவும் இதனால், அந்தக் கதிரைகள் சொகுசுத் தன்மையை இழந்துள்ளதாகவும் அத்தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பாராளுமன்ற முழுக் கட்டிடத் தொகுதியையும் புனரமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக பாராளுமன்ற மலசல கூட வசதிகள் சீர் செய்யப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற தகவல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

