கூட்டு எதிர்க் கட்சியினால் எதிர்வரும் 5 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பிரதான நோக்கம் ஜனநாயக அரசாங்கமொன்றை உருவாக்குவதே ஆகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தயவில் பாராளுமன்றத்துக்கு சென்றுள்ள சிலர் சலுகைகளுக்கான கருத்து முரண்பாடு கொண்டு காணப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

