ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 67ஆவது வருட நிறைவை முன்னிட்டு, நாளை (02) முதல் பல்வேறு சமய நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
முதலாவது சமய நிகழ்வு களனி ரஜமகா விகாரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (02) மாலை இடம்பெறவுள்ளது.
கட்சியின் வருடாந்த பொதுக் கூட்டம், இம்மாதம் இறுதிக்குள் நடைபெறவுள்ளதாகவும் தற்பொழுது கட்சிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், புதிய அதிகாரிகள் சபை மற்றும் மத்திய செயற்குழு என்பனவற்றுக்கான புதிய உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

