பாடசாலையினுள் போதைப்பொருள் பாவனையை இனங்காணும் பொறுப்பு அதிபர்களுக்கு-அகிலவிராஜ்

313 0

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவிவரும் போதைப்பொருள் பாவனையை இனங்காணும் பொறுப்பு வலயக் கல்வி பணிப்பாளர்கள் முதல் பாடசாலை அதிபர்கள் வரை காணப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அதிபர்கள் பாடசாலையை நிர்வாக அலகாகக் கருதி செயற்பட வேண்டும் என இங்கு சுட்டிக்காட்டிய கல்வி அமைச்சர், சுற்றுநிருபங்கள் வெளியிட்டு மாத்திரம் இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்தார்.

மாணவர்களின் நடத்தையைக் கண்காணிப்பதன் மூலம் இது தொடர்பில் புரிந்துகொள்ள முடியும் என குறிப்பிட்ட அமைச்சர் பாடசாலையினுள் தகவல்களை பெற்றுக்கொள்ள தொடர்பு வலைப்பின்னல்களை அமைத்துக்கொள்ளவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment