இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான, காலி டிப்போ ஊழியர்கள் இன்று (31), பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக, காலி டிப்போவுக்குரிய, எந்தவொரு பஸ்ஸூம் சேவையில் ஈடுபடவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளதற்கமைய, 10,000 ரூபாய் கொடுப்பனவை, தமது அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

