வேன் ஒன்று வீதியை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது குடைசாய்ந்த்தில் 16பேருக்கு சிறு காயங்கள்

303 0

மஹியங்கனையில் இருந்து நாவலபிட்டி பகுதியை நோக்கி பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது குடைசாய்ந்த்தில் 16 பேர் காயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனையில் இருந்து நாவலபிட்டி பகுதியை நோக்கி பயணித்த வேன் ஒன்று நாவலபிட்டி கம்பளை பிரதான வீதியின் உலப்பனை பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி குடியிருப்பு ஒன்றின் மீது குடைசாய்ந்தத்தில் 16 பேர் காயங்களுக்குள்ளாகி நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நேற்று (30.08.2018) வியாழக்கிழமை இரவு 12.00 மணியளவில் உலப்பனை முஸ்லிம் பாடசாலைக்கு அருகாமையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வேன் வண்டியில் பயணித்தவர்கள் நாவலபிட்டி கலப்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மஹியாங்கனை பகுதியில் வழிபாடு ஒன்றுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த வேன் வண்டியில் அதிகமாக சிறுவர்களே பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வேன் குடைசாய்ந்த பகுதியில் உள்ள வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, குறித்த வேன் வண்டியும் சேதமடைந்துள்ளதாக கம்பளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வேன் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment