வைத்தியசாலை கழிவுகளை அழிக்க தற்காலிகத் தீர்வு

294 0

மேல் மாகாணாத்திலுள்ள வைத்தியசாலைகளில் சேரும் சிகிச்சைக் கழிவுகளை அழிப்பதற்கு, முத்துராஜவல பிரதேசத்தில்  இடமொன்று  கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவையின் அனுமதியின் கீழ்குறித்த இடம்​ கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை குறித்த கழிவுகளை வந்த தனியார் நிறுவனமொன்று, அப்புறப்படுத்தி வந்த நிலையில், இந்த நிறுவனத்தால் சேர்க்கப்படும் கழிவுகள் முல்லேரியா வைத்தியசாலைக்குரிய இடமொன்றில் அழிக்கப்பட்டு வந்தது.

எனினும்  அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதேசவாசிகள் தாக்கல் செய்த மனு காரணமாக, பொதுமக்களை பாதிக்கச் செய்யும் வகையில், இரசாயணப் பொருட்களை குறித்த இடத்தில் அழிப்பதற்கு தடைசெய்யும் வகையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், கடந்த சில வாரங்களாக வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கழிவுகள் அழிக்ககப்படாமல் வைத்தியசாலை வளாகங்களில்  தேங்கி கிடப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் கழிவுகள் அழிக்கப்படும் இடத்தில் குறித்த கழிவுகளையும் தறிகாலிகமாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

Leave a comment