மூவரின் தகுதிகள் குறித்து ஆராயவுள்ள நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பான செயற்குழு!

296 0

புதிதாக நியமிக்கப்படவுள்ள இரண்டு தூதுவர்கள் மற்றும் கூட்டுதாபனமொன்றின் தலைவர் ஒருவரது தகுதிகள் குறித்து ஆராய நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பான செயற்குழு தீர்மானித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவிற்கான இலங்கையின் தூதுவராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள ஈ.ரொட்னி எம். ​பெரேரா, பெல்ஜியம் ட்ரையல்ஸ் நகரம் மற்றும் ஐரோப்பாவுக்கான இலங்கைத் தூதுவராக பெயரிடப்பட்டுள்ள கிரேஸ் ஆசிர்வாதம் மற்றும் மகாவலி கூட்டுதாபனத்தின் வியாபார சங்கத்தின் தலைவராக பெயரிடப்பட்டுள்ள ஜே.ஏ.புத்திக விஜித செனவிரத்ன ஆகியோரின் தகுதிகள் குறித்தே நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பான செயற்குழு  ஆராய தீர்மானித்துள்ளது.

ரொட்னி பெரேராவின் நியமனம் குறித்து எதிர்ப்புகள் இருக்குமாயின் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னரும், கிரேஸ் ஆசிர்வாதம் மற்றும் விஜித செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக எதிர்ப்புகள் இருக்குமாயின், 12ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அறிவிக்குமாறும், நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பான செயற்குழு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a comment