சுற்றுலா சென்ற சிறுவன் மரணம்

10458 48

சிலாபம் மாராவில் பகுதியில் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலையில் நகையகம் ஒன்றில் கடமையாற்றும் ஊழியர்கள் வருடாந்தம் சுற்றுலா செல்வது வழக்கமாகும்.

அந்தவகையில் மாராவில் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், குறித்த சிறுவன் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்துள்ளார்.

வீழ்ந்த சிறுவனை அவரின் தந்தை மற்றும் உணவகத்தின் சேவையாளர்களின் உதவியுடன் மீட்டு மாராவில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது சிகிச்சைகளை மேற்கொண்ட வைத்தியர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்தியதன் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment