முஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதம், விசாரணை நடாத்த வேண்டும் – ராவணா பலய

364 0

ஆயுதம் வைத்திருக்கும் முஸ்லிம் அமைச்சர்களின் பெயருடன் தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் அது குறித்து அரசாங்கம் பொடுபோக்காக இருக்காது விசாரணை நடாத்த வேண்டும் என ராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தே கந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னர் எல்.ரி.ரி.ஈ. அமைப்பினரிடம் காணப்பட்ட ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்தனர். இது குறித்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

இதனை  வெறும் வார்த்தைகளாக மட்டும் கொள்ளாமல் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேரர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a comment