கூட்டு எதிர்க் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்து கொள்ள முடியாத வறுமை நிலையை மறைப்பதற்கே மஹிந்த ராஜபக்ஷ தனக்கு மீண்டும் போட்டியிட முடியும் என வாதிட்டு வருகின்றார் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமாகிய துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கட்சியின் உள்ளே காணப்படும் பிரச்சினையை மறைப்பதற்கே இந்த நடவடிக்கையை அவர் ஆரம்பித்துள்ளார். இதனால், மக்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றப் பார்க்கின்றார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

