2019 இல் புதிய அரசியல் முன்னணி – JVP

198 0

நாடு  அடைந்துள்ள பின்னடைவிலிருந்து மீட்டெடுப்பதற்கு தற்பொழுது காணப்படும் அரசியல் முறைமையினால் முடியாது எனவும் இதற்காக வேண்டி எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் புதிய அரசியல் முன்னணியொன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

பதுளை தபால் கேட்போர் கூடத்தில் இன்று (19) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த முன்னணியில் நாட்டிலுள்ள புத்திஜீவிகள் மற்றும் நாட்டுப் பற்றாளர்கள் காணப்படுவார்கள். தற்பொழுதுள்ள பாராளுமன்றத்தில் காணப்படுபவர்கள் குறைந்தபட்சம் சாதாரண தரம் கூட சித்தியடையாதவர்களாக உள்ளனர். இவர்களிடம் நாட்டை ஒப்படைத்தமையினாலேயே இந்நிலை நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப பாராளுமன்றத்துக்கும் மாகாண சபைக்கும் படித்தவர்கள் செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment