மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்- ஜி.எல்.

154 0

மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் எனவும், இதற்கு சட்டத்தில் இடம் இருப்பதாக கோரவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

1978 ஆம் ஆண்டு சட்டத்தின் படி ஒருவர் இரு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாக வர முடியும். பின்னர் 18 ஆவது திருத்தச் சட்டத்தின் படி இரண்டு முறைக்கு மேலாகவும் வர முடியும் என மாற்றம் செய்யப்பட்டது.

இதனை இந்த நல்லாட்சி அரசாங்கம் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாற்றியது. 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பின்னர் நாட்டில் ஆட்சிக்கு வரும் ஜனாதிபதிகளுக்கே இச்சட்டம் பொருந்தும். மஹிந்த ராஜபக்ஷ இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் முன்னரே நாட்டில் ஜனாதிபதியாக இருந்தார்.

இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரமல்ல. முன்னாள் ஜனாதிபதிகள் சகலருக்கும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் கலந்துகொள்ள முடியும் எனவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment