ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அன்னான் காலமானார்

265 0

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அன்னான் இன்று தனது 80 ஆவது வயதில் காலமானார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது பொதுச் செயலாளர் பதவியில் கடந்த 1997 ஜனவரி முதல் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் வரை இவர் கடமையாற்றியுள்ளார்.

கிறித்தவரான இவர் கானாவைச் சேர்ந்தவர்.  சிரியாவிற்கான ஐ.நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாகவும் இவர் 2012 இல் கடமையாற்றியுள்ளார்.

Leave a comment