ஞாயிறு மற்றும் போயா தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துவதை தடை செய்யும் அமைச்சரவைப் பத்திரம் மிக விரைவில் கொண்டுவரவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அறிவித்துள்ளார்.
ஞாயிறு மற்றும் போயா தினங்களில் பிற்பகல் 2 மணி வரை மேலதிக வகுப்புக்களை நடாத்துவது இந்த அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் தடை செய்யப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் எழுபிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

