பகிடிவதையில் ஈடுபட்டால் 10 வருடம் சிறை – விஜேதாச

201 0

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மேற்கொள்வோருக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என  உயர் கல்வி  அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

பகிடிவதை சட்டத்திற்கு அமைவாக குற்றம் இழைத்தவராக காணப்படும் ஒருவருக்கு நீதி மன்றத்தின் மூலம் கடும் வேலையுடன் கூடிய 10 வருட காலம் வரையிலான சிறை தண்டனையை விதிக்க முடியும்.

கடந்த இரண்டு வருட கல்வி ஆண்டு காலப் பகுதியில் பல்கலைக்கழக அனுமதிக்காக பதிவு செய்யப்பட்டிருந்த மாணவர்களுள் 1989 பேர் பகிடிவதையின் காரணமாக பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

அத்துடன், இதுவரையில் 14 மாணவர்கள் பகிடிவதையின் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர்,  இவற்றின் பின்னால், தீவிரவாத அரசியல் கட்சிக்கு உட்பட்ட குழுவொன்றே செயற்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

Leave a comment