ஜனா­தி­பதி, பிர­த­மரின் பெயர்­களை பயன்­ப­டுத்தி நிதி மோசடி!

191 0

ஜனா­தி­பதி, பிர­த­மரின் பெயர்­களை பயன்­ப­டுத்தி வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­களை பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரி­வித்து நிதி மோசடி செய்யும் நபர்­க­ளுக்கு எந்­த­வித மன்­னிப்பும் இல்லை. அவர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படுமென வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாண­யக்­கார தெரி­வித்தார்.

பிர­தமர் அலு­வ­ல­கத்தில் பணி­பு­ரி­வ­தா­கவும் சிரேஷ்ட அமைச்சர் ஒரு­வ­ருக்கு மிகவும் நெருக்­க­மா­னவர் எனவும் தெரி­வித்து, வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பெற்­றுத்­த­ரு­வ­தாக வாக்­கு­றுதியளித்து நிதி மோசடி புரிந்த நபர் ஒருவர் இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் அதி­கா­ரி­க­ளினால் கடந்­த­வாரம் அம்­பாறை உகன பிர­தே­சத்தில் கைது­செய்­யப்­பட்­டி­ருந்தார். இது தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே பிர­­திய­மைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து கூறு­கையில்,

வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­களை பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரி­வித்து பணம் அற­விடும் சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வ­தாக தகவல் கிடைத்­து­வ­ரு­கின்­றது. பிர­த­மரின் செய­லாளர் என தன்னை அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொண்டு ஜேர்­மனில் தொழில் பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரி­வித்து பணம் அற­விட்­டுக்­கொண்டிருக்கும் நிலையில் அண்­மையில் நபர் ஒருவர் கைது­செய்­யப்­பட்டார். அதனால் நாட்டு பிர­ஜைகள் யாராக இருந்­தாலும் வெளி­நாட்டு தொழி­லுக்கு செல்­வ­தாக இருந்தால் அதற்­கு­ரிய முறையில் செல்­ல­வேண்டும். அதற்­காக அவர்கள் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் தங்­களை பதி­வு­செய்­து­கொள்­ள­ வேண்டும்.

ஜனா­தி­பதி, பிர­தமர் விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்சர் ஹரீன் பெர்­ணாந்து மற்றும் பிரதி அமைச்­ச­ராக இருக்கும் எனது பெய­ரையோ அல்­லது வேறு அமைச்­சர்­களின் பெயர்­க­ளையோ பாவித்து வெளி­நாட்டு வேலை­வாய்ப்பை பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரிவித்து யாரா­வது பணம் அற­விடும் நட­வ­டிக்­கையை மேற்­கொள்­வ­தாக இருந்தால் அது மோசடி நட­வ­டிக்­கை­யாகும். இவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளோம்.

வெளி­நாட்டுவேலை­வாய்ப்­புக்­காக செல்­ப­வர்கள், யாருக்கும் பணம் கொடுக்­கத்­தே­வை­யில்லை. அத்­துடன் ஜப்பான், இஸ்ரேல் அல்­லது கொரியா ஆகிய நாடு­களில் தொழில் வழங்­கும்­போது பணம் அற­விட எவ­ருக்கும் அனு­மதி வழங்­கி­ய­தில்லை. அவ்­வாறு பணம் அற­வி­டு­வ­தாக இருந்தால் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்­தினால் அனு­ம­திக்­கப்­பட்ட பணம் மாத்­தி­ரமே அற­வி­டப்­படும். அதனை பணி­ய­கத்தின் இணை­யத்­த­ளத்­தி­னூ­டாக அறிந்துகொள்ளலாம்.

அதனால் மக்களின் அறியாமையை பயன்படுத்தி யாராவது ஜனாதிபதி, பிரதம ரின் பெயர்களை பிரயோகித்து பண மோசடிகளில் ஈடுபடுவது தொடர்பாக அறிந் தால் அதுதொடர்பில் எங்களுக்கு அறியத்தரவும். அது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்றார்.
4

Leave a comment