கலாவெவ தேசிய பூங்காவிற்குள் இரவு நேரத்தில் அனுமதியற்ற விதத்தில் நுழைந்து யானை தாக்கியதில் உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கல்கிரியாகம வனஜீவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பில் அடையாளம் காண முடியா அளவிற்கு சடலம் சிதைவடைந்துள்ளதாக கல்கிரியாகம வனஜீவ அதிகாரி டீ.ராமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் பூங்காவிற்குள் அனுமதியற்ற விதத்தில் நுழைந்துள்ளதாகவும் இரண்டு நாற்களுக்கு முன்னர் இந்த யானை தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் தனியாக பூங்காவிற்குள் சென்றுள்ளாரா அல்லது குழுவாக சென்ற நேரம் தாகடகிதலட மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது யானை தாக்கியதற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கெகிராவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

