கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது

329 0

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் குடாகம பகுதியில் ஒரு இலட்சத்து எட்டாயிரம் மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் 4 சந்தேக நபர்கள் நேற்று (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த 4 சந்தேக நபர்களும் விற்பனை செய்வதற்காகவே இந்த கேரள கஞ்சாவை தம் வசம் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலே இந்த 4 சந்தேக நபர்களும் கைது செய்யபட்டதாக தெரிய வந்துள்ளது.

இதேவேளை, கைது செய்யபட்ட நான்கு சந்தேக நபர்களும் நோர்வூட் மற்றும் ஹட்டன் பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஹட்டன் கலால் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட நான்கு சந்தேக நபர்களையும் இன்று (14) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை ஹட்டன் கலால் திணைக்களம் மேற்கொண்டு வருவதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a comment