ஞானசார தேரரை நினைவு மறக்கடிக்கச் செய்ய முடியாதவாறு பிரச்சினை- டாக்டர் பிரபாத்

225 0

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு  சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட முடியாதுள்ளதாகவும் அவரது இருதயத் துடிப்பில் காணப்படும் வித்தியாசமான செயற்பாடு அதற்குக் காரணம் எனவும் அவ்வைத்தியசாலையின் மேலதிக பணிப்பாளர் டாக்டர் பிரபாத் வீரவத்த தெரிவித்துள்ளார்.

தேரருடைய இருதய செயற்பாட்டில் சிறு மாற்றம் காணப்படுவதாகவும் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையையடுத்து வைத்தியர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் டாக்டர் மேலும் கூறியுள்ளார்.

இதனால், இவரை நினைவு மறக்கடிக்கச் செய்ய இவருடைய இருதயத் துடிப்பு மாற்றம் தடையாகவுள்ளதாகவும் டாக்டர் பிரபாத் கூறியுள்ளார்.

ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் 2 சென்ரி மீட்டர் அளவான கல் ஒன்று உள்ளதாகவும் இதனை அகற்றுவதற்கு இன்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட விருந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment