புதிய வாக்காளர் இடாப்பு மக்கள் பார்வைக்கு, மாற்றம் இருப்பின் அறிவிக்கவும்- எம்.எம்.மொஹம்மட்

225 0

சீர்திருத்தம் செய்யப்பட்டு வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தொடர்பிலான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் தெரிவித்துள்ளார்.

புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள பெயர்ப் பட்டியல் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், உள்ளுராட்சி சபைகள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் காரியாலயம் என்பவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பட்டியலில் உள்ள பெயர்கள் சரியாக இடம்பெற்றுள்ளதா என்பதனை வாக்காளர்கள் பரீட்சிக்க முடியும்.

பெயர்ப் பட்டியலில் தமது பெயர் இல்லையென்றோ அல்லது அதில் யாருடையவாவது பெயர் விடுபட்டு இருப்பதாகவோ கண்டால், அது குறித்து முறைப்பாடு செய்யுமாறும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த புதிய வாக்காளர் இடாப்பை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பத்தில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment