பாதாள உலக குழுவின் ஆதரவு மட்டுமே அரசாங்கத்துக்கு உள்ளது- திலும் அமுனுகம

239 0

இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு மக்களின் ஆதரவும் இல்லை. ஊடகங்களின் ஆதரவும் இல்லை. உள்ள ஒரே ஆதரவு பாதாள உலக குழுவினுடையதாகும் என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இன்று நாடு அராஜக நிலைக்கு சென்றுள்ளது. மக்கள் இன்று ரயிலில் பயணிப்பதற்கு ரயில் சேவையில் இல்லை. பஸ்ஸில் செல்வதற்கு பஸ் இல்லை. வைத்தியசாலைக்குச் சென்றால் நோயாளர்களுக்கு மருந்து கொடுக்க டாக்டர்கள் இல்லை.

அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர்களுக்கு விதித்துள்ள வரியை 10 வீதத்தினால் குறைப்பதாக கூறுகின்றார். நிதி அமைச்சர் வேறு ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு அவ்வாறு செய்ய முடியாது எனக் கூறுகின்றார். இந்த அரசாங்கம் இன்று பைத்தியர்களின் மடமாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்

Leave a comment