வழக்கின் சாட்­சி­களை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த உயர்­நீ­தி­மன்றம் தீர்­மானம்!

294 0

நீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றச்­சாட்டின் கீழ் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்­க­விற்கு எதி­ராக சட்­டமா அதிபர் தாக்கல் செய்­துள்ள வழக்கின் சாட்­சி­களை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த உயர்­நீ­தி­மன்றம் நேற்று தீர்­மா­னித்­தது.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க நீதி­மன்றத்தை அவ­ம­தித்­துள்­ள­தாக கூறி குற்றப் பத்­தி­ரி­கையின் வரைபை சட்டமா அதிபர் கடந்த ஜூலை 30 ஆம் திகதி உயர் நீதி­மன்றில் சமர்ப்­பித்த நிலையில், அது, நேற்று எந்த திருத்­தங்­களும் இன்றி குற்றப் பத்­தி­ரி­கை­யாக பிரதி அமைச்சர் ரஞ்­ச­னுக்கு எதி­ராக நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து அந்த குற்றப் பத்­தி­ரி­கையில், ரஞ்­ச­னுக்கு எதி­ராக 4 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டிருந்தன.

குறித்த குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் தான் சுற்­ற­வாளி என ரஞ்சன் ராம­நா­யக்க நீதி­மன்­றத்தில் அறி­வித்­ததை தொடர்ந்தே வழக்கின் சாட்­சி­களை விசா­ரிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

பிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப், உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளான நளின் பெரேரா மற்றும் பிர­சன்ன ஜய­வர்­தன ஆகியோர் முன்­னி­லையில் இந்த வழக்கு நேற்று பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போதே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

இந் நிலையில் வழக்கின் சாட்­சி­யா­ளர்கள் பட்­டி­யலை நீதி­மன்­றத்தில் எதிர்­வரும் செப்டெடம்பர் 5 ஆம் திகதி சமர்ப்­பிக்­கு­மாறு உயர்­நீ­தி­மன்றம் சட்­டமா அதி­ப­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்த நிலையில் அன்­றைய திக­திக்கு இந்த வழக்­கையும் ஒத்தி வைத்­தது.

நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த விவ­காரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்­க­விற்கு எதி­ராக, மாகல்­கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமா­னப்­படை அதி­கா­ரி­யான சுனில் பெரேரா ஆகியோர் உயர் நீதி­மன்றில் வழக்கு தொடர்ந்­தி­ருந்­தனர்.

ரஞ்சன் ராம­நா­யக்­க­விற்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவில், கடந்த 2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யிட்ட ரஞ்சன், நாட்டில் பெரும்­பா­லான சட்­டத்­த­ர­ணிகள் ஊழல் ­வா­திகள் என குறிப்­பிட்­டுள்­ள­தா­கவும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் இவ்­வாறு கூறி­ய­மை­யா­னது, மக்­க­ளுக்கு நீதித்துறை தொடர்பில் இருக்கும் நம்­பிக்­கையை சீர்­கு­லைக்க வாய்ப்­புள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இதனால், நீதி­மன்­றத்­திற்கு அப­கீர்த்தி ஏற்­பட்­டுள்­ள­தா­கவும், இது தொடர்பில் விசா­ரணை நடத்தி பிரதி அமைச்­ச­ருக்கு எதி­ராக உரிய தண்­ட­னையை வழங்­கு­மாறும் மனு­தா­ரர்கள் கோரி­யுள்­ளனர்.

பிரதி அமைச்சர் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்த கருத்து தொடர்­பான காணொ­ளியை பரி­சீ­லித்த உயர்நீதி­மன்ற நீதி­ப­திகள் மேலோட்­ட­மாக பார்க்கும் போதே, அவர் நீதிமன்றத்தை அவ­மா­னப்­ப­டுத்தும் வித­மாக பேசு­வது தெளி­வாக தெரி­வதால் ரஞ்சன் ராம­நா­யக்­க­விற்கு எதி­ராக குற்றப் பத்­தி­ரி­கையை தாக்கல் செய்ய நட­வ­டிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

அதனடிப்படையில் சட்டமா அதிபரினால் முதலில் குற்றப்பத்திரிகை வரைவு முன் வைக்கப்பட்டதுடன் நேற்று அது குற்றப் பத்திரிகையாக தாக்கல் செய்யப்பட்டது. அதன்படியே ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a comment