பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு பதிலாக அவர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் கடமை நிமித்தம் நாடு முழுவதும் பயணிக்க வேண்டி இருப்பதால், அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளை சற்று அதிகரிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
தான் இராஜாங்க அமைச்சர் என்பதனால் தனக்கு சம்பளமாக 3 1/2 இலட்சம் ரூபா வழங்கப்படுகின்ற போதிலும் அதில் 2 இலட்சம் எரிபொருளுக்காகவே செலவளிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தான் பொறியியளலராக இருந்திருப்பின் அமைச்சர்களின் சம்பளத்தை விட இரு மடங்கு சம்பளம் பெற்றிருக்கலாம் என அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (07) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

