போலி கடவுச்சீட்டுகளை தயாரித்த நபர் கைது

312 0

தலங்கம, போதிராஜ வீதியில் போலி கடவுச்சீட்டுகளை தயாரித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 95 போலி கடவுச்சீட்டுகள், மடிக்கணணி மற்றும் ஸ்கேன் இயந்திரம் ஒன்றுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வேறு நபர்களுடைய கடவுச்சீட்டுக்களை பெற்று அவற்றை கொரியா, இத்தாலி, பிரான்ஸ், இந்தியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு செல்லும் விதமாக போலி கடவுச்சீட்டுக்களை தயாரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலங்கம, போதிராஜ வீதியை சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment